/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு
ADDED : அக் 26, 2025 04:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அக்.,ல் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சைத் துறை சார்பில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் அமுதா ராணி பேசியதாவது:
மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் இதிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெண்ணும் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டறியும் திறன், நம்பிக்கை பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம் என்றார்.சிறப்பு புற்று நோய் நிபுணர்கள் சுயமாக மார்பக பரிசோதனை செய்வது, ஸ்கிரினிங் மாமோகிராபியின் முக்கியத்துவம், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கினர்.
முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

