/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டா மாற்ற ரூ.37 ஆயிரம் லஞ்சம்; இ-சேவை மைய பொறுப்பாளர் கைது; வி.ஏ.ஓ., தப்பினார்

ADDED : பிப் 09, 2025 06:29 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாற்றத்திற்கு கொடுக்கப்பட்ட லஞ்ச பணத்தைப் பெற்ற இ--சேவை பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., பார்த்திபன் தப்பினார்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா குமிழேந்தல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தனது தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டா மாறுதல் கேட்டு பகவதிமங்கலம் குரூப் வி.ஏ.ஓ., பார்த்திபனை 28, அணுகினார். பட்டா மாற்றத்திற்கு அவர் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார்.
முதல் கட்டமாக ரூ.37ஆயிரம் கொடுக்குமாறும், பணி முடிந்த பின் மீதித் தொகையை கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் விவசாயி புகார் செய்தார்.
அவர்கள் அறிவுரைப்படி ரூ.37 ஆயிரத்தை விவசாயி கொண்டு சென்றபோது, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் கொடுக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார். அதன்படி பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இ-சேவை மைய பொறுப்பாளர் அகமது ஜாப்ரின் அலியை 25, கைது செய்தனர். இதையறிந்த பார்த்திபன் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து தப்பினார். தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பார்த்திபனை தேடி வருகின்றனர்.