ADDED : டிச 16, 2025 05:06 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி கிராம வி.ஏ.ஓ., கருப்புசாமி 58. இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது தாய் பெயரில் உள்ள இடத்தை கிரயம் செய்த நிலையில் பட்டா மாறுதல் செய்ய விண்ணப் பித்திருந்தார்.
கருப்புசாமி ரூ. 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அந்தளவு பணம் தர முடியாது என அந்த நபர் மறுத்த போது ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும் என கருப்புசாமி மீண்டும் கேட்டார். லஞ்சம் கொடுக்காத விரும்பாத அந்த நபர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூ.13 ஆயிரத்தை அந்த நபரிடம் பெற்ற கருப்புசாமியை கைது செய்தனர். அதையடுத்து கருப்புசாமியை ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தற்காலிக பணி நீக்கம் செய்தார்.
