/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செக் மோசடி வழக்கில் சகோதரர்களுக்கு ஓராண்டு சிறை: ரூ.14.88 லட்சம் அபராதம்

ADDED : டிச 30, 2024 11:43 PM
ராமநாதபுரம்: செக் மோசடி வழக்கில் சகோதரர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், இழப்பீடாக தலா ரூ.7.44 லட்சம் வழங்கவும் ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் எண் 2 தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் அருகே நம்பியான்வலசையைச் சேர்ந்த சேது மகன் முனியசாமி 40. இவர் போக்குவரத்துநகர் ரயில்வே பீடர் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன்கள் ராஜகுமாரன் 38, சுரேஷ்கண்ணன் 36, ஆகியோரது சொத்தை அடமானமாக பெற்றுக் கொண்டு ரூ.20 லட்சம் கடன் கொடுத்தார்.
கடனை இருவரும் திருப்பி செலுத்துவதற்காக தனித்தனியாக வங்கி காசோலைகளை வழங்கினர். அவற்றை முனியசாமி ராமநாதபுரம் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்து முனியசாமி ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு தொடர்ந்தார். ராஜகுமாரன், சுரேஷ்கண்ணனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் இழப்பீடாக 2 மாதத்திற்குள் முனியசாமிக்கு வழங்கவும், தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நடுவர் பிரபாகரன் தீர்ப்பளித்தார்.-