ADDED : ஏப் 21, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்கூரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முன்பாக கணபதி ஹோமம் துவங்கி சிறப்பு யாகசால பூஜை நடந்தது. பின் கொடி மரத்திற்கு காப்பு கட்டப்பட்டு மூலவரான பத்திரகாளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர்.
பால்குடம், அக்கினி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டினார். பிரசாதம் வழங்கப்பட்டது. தினமும் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். முதுகுளத்துார் பகுதியிலிருந்து மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
