/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோயிலில் கட்டட புனரமைப்பு பணி
/
திருவாடானை கோயிலில் கட்டட புனரமைப்பு பணி
ADDED : ஜன 01, 2026 05:28 AM

திருவாடானை: திருவாடானையில் பழமை வாய்ந்த ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. சுற்றுப் பிரகார தளம் சேதமடைந்தது. பிரகார சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியதில் பணிகள் துவங்கி சுற்றுப்பிரகார நடைபாதையில் கற்கள் பதிக்கப்பட்டன.
தற்போது பிரகார சுவற்றில் விரிசல் ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. பக்தர்கள் கூறுகையில், தற்போது ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் பணி முடியும் தருவாயில் உள்ளது. கோயில் மேல் தளத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் கசிவால் தரைதளத்தில் நீர் தேங்கியது. பக்தர்கள் நடந்து செல்லும் போது சிரமமாக இருப்பதால் மேல்தளத்தில் தட்டோடு பதிக்க வேண்டும் என்றனர்.

