
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் மாட்டு வண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சங்க பொருளாளர் ரவி தலைமை வகித்தார். பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என்ற வகையில் நடந்த இப்போட்டியில் 40க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டி ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.