ADDED : மார் 16, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் மூக்கம்மாள் தாய் மீனம்மாள் கோயில் 61ம் ஆண்டு மாசி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சின்னமாடு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 52 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கமுதி சாயல்குடி ரோட்டில் நடைபெற்ற போட்டியை ரோட்டோரம் இருபுறமும் மக்கள் நின்று கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.