ADDED : அக் 02, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் சூரம்மாள் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சின்னமாடு, பூஞ்சிட்டு மாடு என 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 33 இரட்டை மாட்டு வண்டி கள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ரோட்டின் இருபுறங்களிலும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.