/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹரியானா பக்தர்கள் வந்த பஸ் அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் இரு டிரைவர்கள் காயம்

ADDED : பிப் 11, 2024 12:14 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஹரியானா பக்தர்கள் வந்த பஸ்சும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு டிரைவர்கள் காயமடைந்தனர்.
பிப்.9 இரவு 10:00 மணிக்கு ராமேஸ்வரத்தில்இருந்து துாத்துக்குடி சென்ற அரசு பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் ரவி ஓட்டினார். எதிரில் ஹரியானா பக்தர்கள் மதுரையில் இருந்து தனியார் பஸ்சில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இந்த பஸ்சை மதுரை மேலுாரை சேர்ந்த அழகுராஜா 35, ஓட்டினார்.
இரு பஸ்களும் பாம்பன்அக்காள்மடம் அருகே சென்ற போது எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு பஸ்களின் முன்பகுதி சேதமடைந்தது.இரு டிரைவர்களும் காயமடைந்தனர். பக்தர்கள், பயணிகள் காயமின்றி தப்பினர். பாம்பன் போலீசார் விசாரிக்கின்றனர்.