/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்: பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூன் 24, 2024 01:58 AM
பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் வாரம் முழுவதும் நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.பரமக்குடி ஐந்து முனை ரோடு தொடங்கி, ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், சந்தை கடை, வேந்தோணி விலக்கு வேண்டுகோள் ரோடு வரை ஆங்காங்கே ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.
மேலும் தொடர்ந்து உள்ள ஏராளமான கடைகள், வணிக வளாகங்களுக்கு வருவோர் டூவீலர்களை ரோட்டில் நிறுத்தும்படி உள்ளது. இப்பகுதியில் மருத்துவமனைகள் தொடங்கி ஏராளமான மகால்கள், கமிஷன் கடைகள் உள்ளன. இதனால் சரக்கு ஏற்ற வரும் வாகனங்கள் நாள் முழுவதும் நிறுத்தும்படி உள்ளது. இந்நிலையில் மினி பஸ் குறிப்பிட்ட நிறுத்தம் இன்றி ரோடு முழுவதும் ஆங்காங்கே கை காட்டும் நபர்களுக்காக நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்கின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்ட் முன்பு பஸ்கள் நுழையும் மற்றும் வெளியில் வரும் பகுதிகளில் தெருவோரக்கடைகள் என ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன.இதனால் ஆம்புலன்ஸ்கள் தொடங்கி நாள் முழுவதும் பஸ்கள், வாகன ஓட்டிகள் திணறியபடி செல்கின்றனர். பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் மாணவர்கள் ரோட்டோரங்களில் நடக்க முடியாமல் விபத்து அச்சத்துடன் வாகனங்களுக்கு மத்தியில் கடந்து செல்கின்றனர். ஆகவே சப் கலெக்டர் அபிலாஷா கவுர் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.