/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு
/
வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு
வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு
வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு
ADDED : பிப் 26, 2024 12:51 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் புது பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா - சந்தைகடை ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியான வழிவிடுமுருகன் கோயிலில் இருந்து கேணிக்கரை செல்லும் வழியில் புது பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சி பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் இயங்குகின்றன.
இந்நிலையில் அண்ணாதுரை சிலை ரவுண்டானா, அம்மா உணவகம் அருகே ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.