ADDED : பிப் 12, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் கடைகள் 100 உள்ளன. இதில் 20 கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் 80 பேர் கலந்து கொண்டன
ர். அதிக தொகை கேட்டவர்களுக்கு கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடகைக்கு விடப் பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். உதவியாளர் செல்ல மாரியப்பன் உட்பட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
