/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம் சீரமைப்பு
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம் சீரமைப்பு
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம் சீரமைப்பு
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம் சீரமைப்பு
ADDED : பிப் 10, 2025 04:36 AM

பரமக்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம் முழுவதும் வாகனங்களின் ஆக்கிரமிப்பை போலீசார் அகற்றினர்.
பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் ஆன்மிக சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ளதால் நாள் முழுவதும் பஸ் ஸ்டாண்ட்டில் கூட்ட நெரிசல் இருக்கிறது. ஆனால் போதிய இடவசதி இல்லாமல் பஸ் ஸ்டாண்ட் நெருக்கடியில் தவிக்கிறது.
பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதியில் தினந்தோறும் நுாற்றுக்கணக்கான டூவீலர்களை நிறுத்திச் செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால் பஸ்களை தகுந்த ரேக்குகளில் நிறுத்த முடியாமல் டிரைவர்கள் தவித்தனர். பஸ்களில் ஏற முதியவர்கள், சிறுவர்கள் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டி காட்டியது. இதன் எதிரொலியாக போக்குவரத்து போலீசார் சில நாட்களாக பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்துவது குறைந்துள்ளது.
எனவே இந்த நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.