ADDED : செப் 15, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கில் இருந்து கூடலுார், நத்தக்கோட்டை, ஆய்ங்குடி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் மேலையூர், மஞ்சக்கோட்டை பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து கூரை சிமென்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுவதால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பாதிப்படைகின்றனர்.
இதனால் மழை, வெயில் நேரங்களில் நிழற்குடைக்குள் செல்ல பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
