ADDED : மே 15, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து மக்கள் முதுகுளத்துார், சிக்கல் செல்வதற்காக காத்தாகுளம் விலக்கு ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது வரை பராமரிப்பு பணி செய்யப்படாததால் நிழற்குடை ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு கூரை பெயர்ந்து விழுகிறது. மழை, வெயில் காலத்தில் பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.