/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் பெயரளவில் இயக்கம், பல மாதங்களாக குடிநீர் வரல: த.மு.மு.க., கலெக்டரிடம் புகார்
/
பஸ் பெயரளவில் இயக்கம், பல மாதங்களாக குடிநீர் வரல: த.மு.மு.க., கலெக்டரிடம் புகார்
பஸ் பெயரளவில் இயக்கம், பல மாதங்களாக குடிநீர் வரல: த.மு.மு.க., கலெக்டரிடம் புகார்
பஸ் பெயரளவில் இயக்கம், பல மாதங்களாக குடிநீர் வரல: த.மு.மு.க., கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 22, 2025 05:40 AM

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் - ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் பெயரளவில் இயக்கப்படுகிறது. காஞ்சிரங்குடி ஊராட்சியில் பல மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என திருப்புல்லாணி ஒன்றிய த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் கலெக்டர்
சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
ராமநாதபுரம் டூ ரெகுநாதபுரம் (வழி சேதுக்கரை) வழித்தடத்தில்
5-ஏ பஸ் இயங்கி கொண்டிருந்தது. தற்போது பல மாதங்களாக இந்த வழித்தடத்தில் சரியாக பஸ் இயங்கவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்கிறது. தண்டரேந்தல், மேலப்புதுக்குடி, வெள்ள பிள்ளையார் கோவில், சேதுக்கரை, கீழப்புதுக்குடி, பிச்சாவலசை, சிலையப்பன்வலசை, காவல்காரன் வலசை, தினைக்குளம், நாடார் குடியிருப்பு, சண்முகவேல் பட்டினம்,
காக்கையான் வலசை, கட்டையன் பேரன் வளைவு, மங்கம்மாள் சாலை ஆகிய பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், மற்றும் தினைக்குளம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களும் இந்த வழித்தடத்தில் பஸ் சரிவர இயக்கப்படாததால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
காஞ்சிரங்குடி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் சரியான முறையில் வராததால் மக்கள் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அரசு பஸ் வசதி, தினமும் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.