/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தத்தங்குடி செல்லும் சாலையில் தரமற்ற நிலையில் தடுப்புச் சுவர் ஊருணியில் புதர் மண்டியது

ADDED : ஆக 15, 2025 11:12 PM

சிக்கல்: சிக்கல் அருகே கொத்தங்குளம் ஊராட்சி தத்தங்குடி செல்லும் ஊருணி கரையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் தரமற்றுள்ளது.
கொத்தங்குளம் அருகே தத்தங்குடி செல்லும் வழியில் உள்ள ஊருணி 3 ஏக்கரில் உள்ளது. இதில் துார் வாரப்படாமல் நாணல் புற்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறு எவ்வித பயன்பாடும் இன்றி காட்சி பொருளாக உள்ளது.
இந்நிலையில் ஊரக உள்கட்டமைப்பு திட்ட நிதியில் 2014 --2015 ஆம் ஆண்டிற்கான எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்., திட்டத்தில் ரூ.14.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் பராமரிப்பின்றி உள்ளது.
எனவே கடலாடி யூனியன் நிர்வாகம் தடுப்புச் சுவரை முறையாக பராமரிக்கவும், வளர்ந்துள்ள நாணல் புற்களை அகற்றி ஊருணியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.