/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் சிசிடிவி அமைப்பதற்கு வேண்டுகோள்
/
வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் சிசிடிவி அமைப்பதற்கு வேண்டுகோள்
வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் சிசிடிவி அமைப்பதற்கு வேண்டுகோள்
வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் சிசிடிவி அமைப்பதற்கு வேண்டுகோள்
ADDED : டிச 10, 2025 08:55 AM
ஆர்.எஸ்.மங்கலம்: வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தங்களது கட்டடங்களில் சிசிடிவி., கேமரா அமைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இரு தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அர்ச்சுனன் வீட்டில 160 பவுன் நகைகள், 18 லட்சம் பணம் திருடு போனது.
ஆனால், தொழிலதிபர் வீட்டிலோ, வீட்டின் அருகிலோ சிசிடிவி., கேமரா இல்லாததால் இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்களது வீடுகள், தொழில் நிறுவனங்களில் சிசிடிவி., கேமரா அமைத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷான் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களிலும், டவுன் பகுதியிலும் போலீசாரின் முயற்சியால் பல இடங்களில் கேமரா அமைத்துள்ளோம். இருப்பினும் முக்கிய இடங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தங்களது வீடுகள், கடைகள் முன்பு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றார்.

