/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தினமும் யோகா பயிற்சியால் இறைவனை அடையலாம்
/
தினமும் யோகா பயிற்சியால் இறைவனை அடையலாம்
ADDED : ஜன 01, 2024 05:13 AM
சுவாமி சித்தானந்தகிரி அறிவுரை
பரமக்குடி: -பரமக்குடியில் யோகா சத்சங்க தியான மையம் சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.
இதில் தினசரி யோகா பயிற்சியில் ஈடுபட்டால் இறைவனை எளிதாக அடையலாம் என சுவாமி சித்தானந்தகிரி தெரிவித்தார்.
பிரம்மச்சாரி நிரஞ்ஜானந்தா வரவேற்றார். முகாமில் தியானம், சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், தமிழ் பிரபஞ்ச கீதங்கள், புஷ்பாஞ்சலி மற்றும் குரு தேவரின் காணொளி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில், மூத்த சன்னியாசி சுவாமி சித்தானந்தகிரி பேசியதாவது:
அனைவரும் கவலைகள் மறந்து விஞ்ஞான யோகா வழிமுறைகள் மூலம் நம்முள் இருக்கும் ஆனந்தத்தை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆழ்ந்த அமைதி, ஆனந்தத்தை உணரும்போது, மனதை நிலை நிறுத்தினால் இன்பம், துன்பம் ஆகியவற்றை சீராக உணரும் சக்தி கிடைக்கும்
நடைமுறை வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை சமாளிக்கும் திறமை சிறிய யோகா தியானத்தில் கிடைக்கிறது. ஆகவே தினசரி தியான யோக பயிற்சி செய்ய வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் சுவாமி விரஜானந்தா, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கண்ணன் கலந்து கொண்டனர்.