/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் இணைப்பு வயருக்கு கம்பால் முட்டுக்கொடுப்பு
/
மின் இணைப்பு வயருக்கு கம்பால் முட்டுக்கொடுப்பு
ADDED : ஏப் 02, 2025 05:34 AM

திருவடாானை : அரசு இ-சேவை மைய அலுவலகத்திற்கு செல்லும் மின்வயர் தாழ்வாக சென்றதால் கம்பால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகா அலுவலகம் பின்புறம் அரசு இ-சேவை மையம் உள்ளது.
தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த மையத்திற்கு தினமும் செல்கின்றனர். தாலுகா அலுவலகத்திலிருந்து இ-சேவை மையத்திற்கு செல்லும் மின் வயர் தாழ்வாக சென்றது.
வயரை கவனிக்காமல் நடந்து செல்லும் மக்கள் மீது உரசியதால் ஆபத்து ஏற்பட்டது. பெண்கள் அச்சமடைந்தனர்.
அதை பார்த்த அலுவலக ஊழியர்கள் அந்த மின் வயரை கம்பால் முட்டுக் கொடுத்து உயர்த்தி வைத்துள்ளனர்.
பலத்த காற்று வீசும் பட்சத்தில் கம்பு சாய்ந்தால் வயர்கள் கீழே விழுந்து விடும்.
விபத்து ஏற்படும் முன் சரி செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

