/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழவர் பாதுகாப்பு திட்டம்விண்ணப்பிக்க அழைப்பு
/
உழவர் பாதுகாப்பு திட்டம்விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 07, 2024 05:42 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாடானை சமூக நலத்திட்ட தாசில்தார் கணேசன் கூறினார். அவர் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் உள்ள விவசாயிகள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் விவசாயிகளாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் அல்லது பட்டயப்படிப்பு படித்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். காசநோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மனுவை தங்கள் பகுதிக்கு உட்பட்ட வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் அல்லது சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.