sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு அழைப்பு*  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு..*  வட்டார வாரியாக தனி அலுவலர்கள் நியமனம்

/

விவசாயிகளுக்கு அழைப்பு*  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு..*  வட்டார வாரியாக தனி அலுவலர்கள் நியமனம்

விவசாயிகளுக்கு அழைப்பு*  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு..*  வட்டார வாரியாக தனி அலுவலர்கள் நியமனம்

விவசாயிகளுக்கு அழைப்பு*  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு..*  வட்டார வாரியாக தனி அலுவலர்கள் நியமனம்


ADDED : ஜன 14, 2024 04:09 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளதால் முதற்கட்டமாக 70 அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வட்டார வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையில் விற்று பயன்பெறலாம்.

மாவட்டத்தில் 2023--24ம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 717 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தேச நெல் மகசூல் 4 லட்சத்து 25 ஆயிரம் டன் எதிர்பார்க்கப்படுகிறது.அதில் 1 லட்சம் டன் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பெற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை 'ஏ' ரகங்களுக்கு குவிண்டால் ரூ.2310 , சாதாரண ரகங்களுக்கு -ரூ.2265 அரசால் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, கமுதி, முதுகுளத்துார், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கீழக்கரை, போகலுார் வட்டாரத்தில் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வட்டார வாரியாக கொள்முதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நெல்லை விற்று விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 94422 30767 மற்றும் புகார்களுக்கு 83001 75888 என்ற அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.---

பாக்ஸ் மேட்டர்:

ஊர் / கொள்முதல் அலுவலர் பெயர் / அலைபேசி எண்

கடலாடி, போகலுார், ஆர்.எஸ்.மங்கலம் / மணிவண்ணன்/ 94430 87490

திருவாடானை / பாலமுருகன் / 90603 14204

முதுகுளத்துார், ராமநாதபுரம், கீழக்கரை / கரிகாலன்/ 63694 30816

கமுதி, திருப்புல்லாணி / நவமணி / 98438 48684

பரமக்குடி, நயினார் கோவில் / நந்தினி / 95141 66516

----------






      Dinamalar
      Follow us