/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரசார இயக்கம்
/
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரசார இயக்கம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரசார இயக்கம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரசார இயக்கம்
ADDED : ஜூலை 15, 2025 10:22 PM

ராமநாதபுரம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் காரைக்குடி மண்டலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு நடந்தது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 23 மாத பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 2003க்கு ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். வாரிசு வேலைக்கு பதிவு செய்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் படி வாரிசு பென்ஷன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பஸ் ஸ்டாண்ட், அரசு போக்குவரத்துக்கழக கிளைகள் முன்பு பிரசார இயக்கம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் தெய்வீரபாண்டியன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். பரமக்குடிஅரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு பிரசார இயக்கம் நடந்தது. ராமநாதபுரம் நகர் கிளை முன்பு மண்டல செயலாளர்பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
கமுதியில் துணை பொது செயலாளர்ஜீவா தலைமையிலும், முதுகுளத்துாரில் மத்திய சங்க துணைத்தலைவர் திருமலை தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் புறநகர் கிளையில் கிளை செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
ராமேஸ்வரத்தில் கிளைத்தலைவர் தர்மர் தலைமையில் நடந்தது. சிவகங்கையில் துணை பொதுச் செயலாளர் சமயதுரை தலைமையில் நடந்தது. தேவகோட்டையில் கிளை நிர்வாகி தியாகராஜன் தலைமையில் நடந்தது.