/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தாலுகாவில் 17 இடங்களில் முகாம்
/
திருவாடானை தாலுகாவில் 17 இடங்களில் முகாம்
ADDED : ஜூலை 10, 2025 10:45 PM
திருவாடானை; திருவாடானை தாலுகாவில் மூன்று கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 17 இடங்களில் நடைபெற உள்ளது.
திருவாடானை தாலுகாவில் 47 ஊராட்சிகளும், தொண்டி பேரூராட்சியும் உள்ளன. தற்போது தமிழக அரசு அனைத்து கிராம ஊராட்சிகளையும் பேரூராட்சிகளையும் நகர், மாநகர் பகுதிகளையும் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாடானை ஒன்றியத்திற்கு உட்பட்ட 47 ஊராட்சிகளுக்கு 15 முகாம்களும், தொண்டி பேரூராட்சிக்கு 2 முகாம்கள் என 17 முகாம்களும் நடக்க உள்ளன.
இம்முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களும், பிற சமூக நலத் திட்டங்களுக்கும், அரசின் மற்ற சேவைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். முதல் கட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் ஆக., 14 வரை 9 முகாம்களும், 15 முதல் செப்., 14 வரை 5 முகாம்களும், 15 முதல் 30 வரை 3 முகாம்களும் நடைபெறும்.
திருவாடானை, அஞ்சுகோட்டை குஞ்சங்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு திருவாடானை இரட்டை அரு பங்களாவில் ஜூலை 15ல் நடைபெற உள்ளது. இத்தகவலை திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்தார்.