/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாகத் தேர்வு
/
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாகத் தேர்வு
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாகத் தேர்வு
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாகத் தேர்வு
ADDED : பிப் 03, 2024 04:56 AM
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் டிப்ளமோ 2024ல் முடிக்க இருக்கும் இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, தொடர்பியல் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக நேர்முக வளாகத் தேர்வு நடந்தது.
சென்னையில் உள்ள லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவனத்தினர் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார்.
நேர்முகத் தேர்வில் சென்னை லுாகாஸ் டி.வி.எஸ்., பிரைவேட் லிமிடெட் உற்பத்தி தலைவர் வல்லவதேவன், மற்றும் சந்தானம் ஆகியோர் வளாக நேர்முகத் தேர்வை நடத்தினர். 118 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட துறையில் 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு மாதம் ரூ.14,690 சம்பளம், உணவு, சீருடை போன்ற வசதிகள் செய்து தருவதாக நிறுவத்தினர் தெரிவித்தனர். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

