ADDED : ஜன 19, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் - -ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே வரத்து கால்வாய் மடையில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சேதமடைந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காக்கூர் அருகே வரத்து கால்வாய் தண்ணீர் செல்வதற்காக கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு மடை அமைக்கப்பட்டது.ரோட்டோரத்தில் மடையுள்ளதால் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடையில் தடுப்புச்சுவர் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவரை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
