/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி
/
புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : நவ 26, 2024 04:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளி வளாகத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்தனர். நவ.25 முதல் 30 வரை காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் பங்கேற்று பேசியதாவது:
புற்றுநோய் இளம் வயதினர் மட்டுமின்றி 65 வயதிற்கும் மேற்பட்டவர்களையும் தாக்குகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்து தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். 40 சதவீதம் புற்று நோய் குணப்படுத்தக் கூடியது. மது, புகைப்பழக்கம், உடல் பருமனை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் ஜான்சன் செரியன், ராமதாஸ், மாவட்டக் கல்வி அலுவலர் ரவி, நேஷனல் அகாடமி பள்ளிகளின் தாளாளர் டாக்டர் செய்யதா, டாக்டர் ராசிகா, கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து, ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஜெயலெட்சுமி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஜோதிலெட்சுமி, சர்வதேச பள்ளியின் முதல்வர் வித்யா ஹரிணி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
2025 டிச.,ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை துவக்கம்
ஹனுமந்த ராவிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிருபர்கள் கேட்டபோது, கட்டுமானப் பணிகள் விரைவாக நடக்கிறது. அடுத்த ஆண்டு 2025 டிச.,ல் மருத்துவமனை துவங்க உள்ளது. அப்போது ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி முழுமையாக மதுரைக்கு மாற்றப்படும் என்றார்.