தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேட்பாளர்கள் பயோடேட்டா

 வேட்பாளர்கள் பயோடேட்டா

 வேட்பாளர்கள் பயோடேட்டா


ADDED : மார் 29, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முதுகுளத்துார் பெயர் : ராஜகண்ணப்பன்

வயது : 77

படிப்பு : பி.எஸ்.சி., பி.எல்.,

தொழில் : அரசியல்

குடும்பம் : மூன்று மகன்கள்

அரசியல் அனுபவம் : 1991--96ல் மூன்று துறைகளின் அமைச்சர், 2000ல் மக்கள் தமிழ் தேசம் கட்சி துவக்கினார். 2006ல் கட்சியை கலைத்து விட்டு தி.மு.க.,வில் இணைந்து இளையான்குடி தொகுதி எம்.எல்.ஏ., 2009ல் தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்து சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2020ல் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி மீண்டும்தி.மு.க.,வில் இணைந்தார். 2021 தேர்தலில் முதுகுளத்துார் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கிறார். தி.மு.க.,வில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவராகவும் உள்ளார்.

கிடைத்தது எப்படி: நீண்ட கால அரசியல் அனுபவம். சிட்டிங் எம்.எல்.ஏ., அமைச்சர் என்ற அடிப்படையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

-- ராமநாதபுரம்

பெயர் : காதர்பாட்சா வயது : 54 படிப்பு : பி.ஏ., தொழில் : அரசியல்வாதி குடும்பம் : மனைவி ஒரு மகன் ஒரு மகள்

அரசியல் அனுபவம்: கமுதி, மேலராமநதி ஊராட்சி தலைவராக நான்கு முறை (1996 முதல் 2016). கட்சியின் ஒருங்கிணைந்த கமுதி ஒன்றிய செயலாளராக 10 ஆண்டுகள். 2018 முதல் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர். 2021 முதல் ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,

கிடைத்தது எப்படி: கட்சியின் மாவட்ட செயலாளராக 2018 ல் பொறுப்பேற்றது முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., விற்கு 100 சதவீதம் வெற்றியை பெற்று தந்துள்ளார். ஸ்டாலின் நம்பிக்கைக்கு உரியவர்.

பரமக்குடி (தனி)

பெயர்: கே.கே.கதிரவன் வயது : 41 படிப்பு : பி.ஏ., பி.எல்., தொழில் : வக்கீல், அரசியல்வாதி குடும்பம் : மனைவி, ஒரு மகன், மகள்.

அரசியல் அனுபவம்: தந்தை கருப்பையா தி.மு.க., கிளைச் செயலாளர், மாணவர் பருவ அரசியல், வார்டு பிரதிநிதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர், போகலுார் ஒன்றிய செயலாளர்.

கிடைத்தது எப்படி: முன்னாள் போகலுார் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர். (2021ல் தற்போதைய எம்.எல்.ஏ., முருகேசன் மாவட்ட கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி.) மாவட்ட செயலாளரின் தீவிர ஆதரவாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us