/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறன் வளர்ப்பு மேம்பாடு பயிற்சி
/
திறன் வளர்ப்பு மேம்பாடு பயிற்சி
ADDED : மார் 02, 2024 04:52 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கான திறன்
வளர் மேம்பாட்டு பயிற்சி ஆர்.எஸ். மங்கலத்தில் நடைபெற்றது.
உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் மகேந்திர பாண்டியன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியாளர் சாம்சன் நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சங்க நிர்வாகிகள், கண்மாய் நீரை முறையாக பயன்படுத்துவது குறித்தும், சங்க நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் குறித்தும் பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சோழந்துார் பால கிருஷ்ணன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

