/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே கார்-டூவீலர் மோதல்: கண்டக்டர் பலி
/
பரமக்குடி அருகே கார்-டூவீலர் மோதல்: கண்டக்டர் பலி
ADDED : ஜூலை 08, 2025 10:44 PM
பரமக்குடி; பரமக்குடி அருகே ராமநாதபுரம் இருவழிச் சாலையில் கார், டூவீலர் மோதிய விபத்தில் அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் பலியானார்.
பரமக்குடி அருகே நெடுயமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் மகன் மதன்குமார் 23. இவர் முதுகுளத்துார் அரசு பணிமனை பஸ்சில் தற்காலிக கண்டக்டராக பணியில் உள்ளார். நேற்று மாலை தனது டூவீலரில் பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி நோக்கி சென்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி கார் ஒன்று வந்தது.
தொடர்ந்து ராமநாதபுரம் இரு வழிச் சாலை தெய்வேந்திர நல்லுார் அருகில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், மதன்குமார் சம்பவ இடத்தில் பலியானார். காரில் பயணம் செய்த சேலம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் சிறு காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

