/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
/
கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
ADDED : ஆக 09, 2025 03:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், தங்க நாணயங்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் பொன்ராஜேஷ் 45. இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தனது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக மதுரையில் இருந்து நேற்று ராமநாதபுரம் வந்தார். ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள நகைக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு தனது உடன் பணிபுரிபவர்களுடன் டீ குடிக்க சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரில் வைத்திருந்த லேப்டாப், தலா ஒரு கிராம்16 வெள்ளி நாணயங்கள், 2 தங்க நாணயங்கள் இருந்த பை காணாமல் போனது தெரிய வந்தது. ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் சோதனை செய்து, சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர்.