/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்
ADDED : ஜன 31, 2024 01:21 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ ஏலக்காய் பார்சல்களை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரை படகு நிறுத்தும் பாலத்தில் பார்சல்கள் கிடந்தன. இந்திய கடற்படை முகாம் லெப்டினன்ட் கர்னல் விஜயகுமார் நர்வால், கடற்படை வீரர்கள் பார்சலை சோதனையிட்டனர்.
இதில் 3 பிளாஸ்டிக் கவரில் 30 கிலோ ஏலக்காய் இருந்தது. மேலும் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரெடிமேட் துணிகள் மற்றும் மார்ட்டின் 40, பொன்னி நகர், காரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரியில் ஆதார் கார்டு இருந்தது.
இதனை பறிமுதல் செய்து மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களின்விசாரணையில் ஏலக்காயை நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடுகின்றனர்.