/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில்நெறி விழிப்புணர்வு திறன் வாரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி
/
தொழில்நெறி விழிப்புணர்வு திறன் வாரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி
தொழில்நெறி விழிப்புணர்வு திறன் வாரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி
தொழில்நெறி விழிப்புணர்வு திறன் வாரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூலை 08, 2025 10:43 PM
ராமநாதபுரம்; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரத்தை முன்னிட்டு கண்காட்சி, கருத்தரங்கு, பேச்சு, கட்டுரை போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 2வது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமும், ஜூலை 15 உலக இளைஞர் திறன் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் ஜுலை 2-வது வாரத்தில், தொழில்நெறி கண்காட்சி, கருத்தரங்கு, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே நடத்தப்படுகிறது.
இதில், இளைஞர்களது வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி, கலை அறிவியல் கல்லுாரிகளில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, அரசின் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் நிகழ்ச்சியாக இன்று ஜூலை (9ல்) மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.