/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
ADDED : நவ 28, 2024 05:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி குறித்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் சுடலைமுத்து வரவேற்றார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அருண்நேரு மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் குறித்து வேலை வாய்ப்பு அலுவலக இளம் தொழிலர் சுமதி விளக்கினார்.
அரசு சாரா வேலை வாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு உதவித்திட்டங்கள்குறித்தும் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி விளக்கினார். ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.
ஆசிரியர்கள் முருகன், விஜயலட்சுமி, லீலாவதி, முபினா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்மணிவண்ணன் ஒருங்கிணைத்தார்.