UPDATED : ஜூலை 15, 2026 05:05 PM
ADDED : ஜூலை 15, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விழிப்புணர்வு திறன் வாரத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி தலைமை வகித்து, தொழில் பயிற்சி குறித்த விளக்க நிகழ்வுகளை வழங்கினார்.
உதவி பேராசிரியர் நாசர், மற்றும் சுஸ்மிதா லுாட்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளி முதல்வர் ஸ்ரீ காருண்யா தேவி வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி குறித்த பல்வேறு கருத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பள்ளி துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.
