/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காஸ் கசிவால் தீ சரக்கு வேன் எரிந்து நாசம்
/
காஸ் கசிவால் தீ சரக்கு வேன் எரிந்து நாசம்
ADDED : ஜூலை 11, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வேன், காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ராமநாதபுரம் மாவட்டம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சைமன் சுல்தான். இவரது காஸ் பொருத்திய சரக்கு வேன், நேற்று மதுரை நோக்கி சென்ற போது, அச்சந்தன்வயல் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காஸ் கசிவால் தீப்பிடித்தது.
டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பொருட்கள் எதுவும் இல்லை. வாகனம் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.