/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்
/
கமுதி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்
கமுதி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்
கமுதி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்
ADDED : மார் 17, 2025 08:08 AM

கமுதி: கமுதி அரண்மனை மேடு அருகே புதியதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலையில் இரு கார்கள் நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காரைக்குடி அருகே சடையன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் திருச்செந்துாரில் சுவாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊருக்கு காரில் வந்தார்.
அப்போது கமுதி அரண்மனை மேடு பகுதி புறவழிச்சாலை அருகே கடலாடி இருந்து கமுதி சென்ற கார் எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த சுப்பிரமணியன், சங்கீதா, அருண், சுமதி உட்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிந்தனர்.