/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
/
வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : -கமுதி அருகே அபிராமம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் 55. நத்தம் பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஐந்து பேர் கணேசனிடம் அரிவாளை காட்டி குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டினர். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவும் தப்பிச் சென்றனர்.
அபிராமம் போலீசில் கணேசன் புகார் அளித்தார். போலீசார் அம்மன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், தங்கபாண்டியன், மூலக்கரைப்பட்டி முத்தமிழ்செல்வன், உடையார்கூட்டம் முகேஷ்கண்ணன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து முத்தமிழ்செல்வன் 32, தங்கபாண்டியன் 21, ஆகிய இருவரை கைது செய்தனர்.