/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிடையில் 30 ஆடுகளை திருடிய 6 பேர் மீது வழக்கு
/
கிடையில் 30 ஆடுகளை திருடிய 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 10, 2024 12:17 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே காரேந்தல் பகுதியில் கிடை அமைத்திருந்த 30 ஆடுகளை திருடிய 6 பேர் மீது ராமநாதபுரம்பஜார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலாடி அருகே மாரியூர் எம்.கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர் அரியமுத்து 66. இவர் காரேந்தல் பகுதியில்1000 செம்மறி ஆடுகளை வைத்து கிடை அமைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்,லட்சுமணன் ஆகியோரை ஆடு மேய்சலுக்காகபணியமர்த்தியுள்ளார்.
இருவரும் 2022 ல் 16 செம்மறிஆடுகளை திருடியதாகவும் போலீசில் புகார் செய்துஇருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் வெளியே வந்து மீண்டும் அரியமுத்துவிடம்பணிக்கு சேர்ந்தனர். இவர்களுடன் சுரேஷ், ராமு ஆகியோர் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து மீண்டும் அரியமுத்து கிடையில் இருந்த 30 செம்மறி ஆடுகளை திருடினர்.
இது குறித்து போலீசில் அரியமுத்து புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்யவில்லை. அரியமுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆடு திருடியவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் மணிகண்டன்,லட்சுமணன், சுரேஷ், ராமு, மற்றும் இரு பெண்கள் மீதுவழக்குப்பதிந்து பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.--------

