/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை ஆசை காட்டி ரூ.17 லட்சம் மோசடி ஓய்வு அலுவலர் மீது வழக்கு; ஒருவர் கைது

ADDED : டிச 20, 2024 01:58 AM

ராமநாதபுரம்:ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக ஓய்வு பெற்ற குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் கவுசல்யா மீது வழக்கு பதிந்த போலீசார், அவரது நண்பர் முத்துராமலிங்கத்தை 64, கைது செய்தனார்.
கடலுார் மாவட்டம் சாக்காங்குடியைச் சேர்ந்த வீரமணி மனைவி சங்கீதா. இவர் 2020ல் ராமநாதபுரத்தில் மூடப்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
அப்போது ராமநாதபுரம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலகத்தில் பணிபுரிந்த தற்போது ஓய்வு பெற்றுள்ள கவுசல்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் மயிலாடுதுறையில் அரசு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை சங்கீதாவுக்கும், அவரது கணவருக்கும் வாங்கித்தருகிறேன் என்றும் அதற்கு ரூ.17 லட்சம் செலவாகும் எனக்கூறினார்.
இதை நம்பிய சங்கீதா 2020 ஜூலை முதல் அக்., வரை கவுசல்யா வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 70 ஆயிரமும், அவரது நண்பர் முத்துராமலிங்கத்திற்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வங்கி கணக்கிலும், நேரில் ரூ.10ஆயிரமும் கொடுத்துள்ளார்.
ஆனால் இருவரும் ஆசிரியர் பணி வாங்கித்தராமல் ரூ.17 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் சங்கீதா புகார் அளித்தார். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். கவுசல்யாவை தேடி வருகின்றனர்.