/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொலை மிரட்டல் புகாரில் கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு
/
கொலை மிரட்டல் புகாரில் கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு
கொலை மிரட்டல் புகாரில் கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு
கொலை மிரட்டல் புகாரில் கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு
ADDED : ஜன 21, 2025 05:36 AM
கமுதி: கமுதி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்தரவின் பேரில், கொலை மிரட்டல் புகாரில் பேரூராட்சி கவுன்சிலர் பொன்னுச்சாமி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கமுதி சத்திரிய நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட விவசாய நிலம் விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள தேக்கு மரங்களை வெட்டியது சம்பந்தமாக 2024 ஆக.22ல் முத்துமாரியம்மன் கோயிலில் கூட்டம் நடந்தது.
அப்போது கமுதி தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் 34, இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து கமுதி பேரூராட்சி கவுன்சிலர் பொன்னுச்சாமி மற்றும் அருள்முருகன், வடிவேல்முருகன், கிருஷ்ணதேவா, சரவணப்பாண்டியன் ஆகியோர் முத்துக்குமரனை தகாத வார்த்தையால் பேசி கல்லால் தாக்கியதுடன் அவர் வைத்திருந்த அலைபேசி, 2 பவுன் செயினை பறித்துக் கொண்டனர்.
முத்துக்குமரன் கமுதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கமுதி நீதிமன்றத்தில் முத்துக்குமரன் வழக்கு கொடுத்தார்.
இதனை விசாரித்த கமுதி குற்றவியல் நீதித்துறை நீதிபதி சங்கீதா உத்தரவில் கமுதி எஸ்.ஐ., சக்திவேல்கணேஷ் கவுன்சிலர் பொன்னுச்சாமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

