/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
/
அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூலை 17, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் குமரேசன் 33. இவரிடம் 12 வது வார்டு அ.தி.மு.க, கவுன்சிலர் பார்த்திபன் 35., சென்று ஒரு பெண்ணை துாய்மை பணியாளராக வேலைக்கு சேர்க்குமாறு கூறினார்.
அதற்கு குமரேசன், பேரூராட்சி செயல்அலுவலர் தான் பணியில் சேர்க்க வேண்டும். நான் சேர்க்க முடியாது என்று தெரிவித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் குமரேசன் தாக்கப்பட்டார். குமரேசன் புகாரில் தொண்டி போலீசார் கவுன்சிலர் பார்த்திபன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.