ADDED : மார் 19, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் த.வெ.க., போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் அனுமதியின்றி கட்சி சின்னத்துடன் போஸ்டர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பின்புறம் சுவற்றில் த.வெ.க., கட்சி போஸ்டர் ஒட்டப்பட்டது.
ராமநாதபுரம் நகர் போலீசார் த.வெ.க., 28 வது வார்டு செயலாளர் சரவணன் மீது வழக்குப் பதிந்துள்ளனர். அதே போல், ராமநாதபுரம் அக்ரஹாரம் ரோடு பகுதியில் த.வெ.க., போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. பஜார் போலீசார் த.வெ.க., நகர செயலாளர் ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்தனர்.
