/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு
/
அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு
ADDED : மார் 28, 2025 01:47 AM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க மியூசியம் அமைக்க தாக்கலான வழக்கில், மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அழகன்குளம் அசோகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
வைகை ஆறு வங்காள விரிகுடா கடலில் கலக்கும் பகுதி அருகே அழகன்குளம் உள்ளது. சங்க இலக்கியங்களில் பாட பெற்றுள்ளது. இங்கு 1986ல் அகழாய்வு நடந்தது. சங்ககால பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அழகன்குளம், 2,400 ஆண்டுகளுக்கு முன் துறைமுகமாக விளங்கியுள்ளது. கீழடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அழகன்குளத்திற்கு தரவில்லை. அழகன்குளத்தில் மியூசியம் அமைத்து பாதுகாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, 'மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.