/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகளால் அவதி
/
திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகளால் அவதி
திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகளால் அவதி
திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகளால் அவதி
ADDED : மே 04, 2025 06:19 AM

திருப்புல்லாணி திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் ஏராளமான கால்நடைகள் திரிவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
திருப்புல்லாணி, பள்ளப்பச்சேரி, பொக்கனாரேந்தல், தண்டரேந்தல், வளையனேந்தல், சேதுக்கரை, தினைக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். சுகாதார நிலைய வளாகம் முழுவதும் ஏராளமான ஆடு, மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாக உள்ளது.
மேலும் வளாகப் பகுதி குண்டும் குழியுமாக உள்ளது. திருப்புல்லாணியை சேர்ந்த தன்னார்வலர் அப்துல் வஹாப் கூறியதாவது:
இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதுமான நர்சுகள் இல்லை. நுழைவு வாயில் பகுதி பராமரிப்பின்றி கால்நடைகள் ஓய்வெடுக்கின்றன. ஏராளமான கிராம மக்கள் வந்து செல்லும் நிலையில் போதிய டாக்டர்களும், உதவியாளர்களும் இல்லை. வட்டார மருத்துவ அலுவலரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதே நிலை தொடர்ந்தால் குறைகளை சுட்டிக்காட்டி மக்களை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.