/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் காவிரி ராட்சத குழாய் சேதம்; குடிநீர் வீண்
/
முதுகுளத்துாரில் காவிரி ராட்சத குழாய் சேதம்; குடிநீர் வீண்
முதுகுளத்துாரில் காவிரி ராட்சத குழாய் சேதம்; குடிநீர் வீண்
முதுகுளத்துாரில் காவிரி ராட்சத குழாய் சேதம்; குடிநீர் வீண்
ADDED : டிச 29, 2024 04:14 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பரமக்குடி ரோடு விநாயகர் கோயில் எதிரில் காவிரி குடிநீர் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது.
முதுகுளத்துார் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முதுகுளத்துார் -- பரமக்குடி ரோடு விநாயகர் கோயில் எதிரில் ரோட்டோரத்தில் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால் காவிரி குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் செல்கிறது.
இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கழிவுநீர் கால்வாயில் செல்வதால் தெரு பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ராட்சத குழாய் சேதத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.