/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரு மாதத்திற்கு மேல் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது

ADDED : அக் 22, 2025 12:55 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியும் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் கமுதி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் எந்தவொரு பயன்பாடின்றி வீணாகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம் இதுவரை மூடப்படாமல் உள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ரோட்டோரத்தில் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அச்சப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவிரி குழாய் உடைப்பை சரி செய்தும், பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.