/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
/
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
ADDED : பிப் 26, 2026 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே ரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீரால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால் காவிரி குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் செல்கிறது. ரோட்டில் குடிநீர் வீணாவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். ரோடு சேதமடையும் நிலை உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

