/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

ADDED : ஜூன் 25, 2025 08:44 AM

முதுகுளத்துார் :முதுகுளத்துார் அருகே அ.நாகனேந்தல் -அபிராமம் செல்லும் ரோட்டோரத்தில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் அருகே அ.நாகனேந்தல் -அபிராமம் செல்லும் ரோட்டோரத்தில் காவிரி குழாய் பதிக்கப்பட்டு கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரோட்டோரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.குடிநீர் வீணாகி ரோட்டோரத்தில் தேங்குகிறது.
இதனால் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை தொடர்கிறது.அப்பனேந்தல், அ.நாகனேந்தல், நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே காவிரி குழாய் உடைப்பை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.